கஜா புயல் அடிச்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 30 நாட்கள் தொடர்ந்தது நம் சேவை !!
முதல் நாள் ஆரம்பிச்ச களப்பணிய 30 வரைக்கும் நிறுத்தல...
வெறித்தனமான உழைப்பு.
பக்காவான ப்ளான்..
எங்க நிவாரணத்த கொண்டு போக முடியாதுன்னு சொல்றாங்களோ? அங்கதான் கொண்டு போனோம்...
இதுவரை 43 Missions.
4000 குடும்பத்துக்கு மேல் உதவிருப்போம்.
35 கிராமங்களுக்கு முழுமையான நிவாரணம் பன்னிருப்போம்.
20 வீட்டுக்கு எங்க கையாலையே தார்பாலின் போட்டு மழையில ஒழுகாம இருக்க கட்டிவிட்டுருக்கோம்.
50 பெரிய சைஸ் தார்பாலின்.
நிவாரணம் கொடுக்க ஆரம்பிச்சதிலிருந்து டெய்லியும் குறைஞ்சப்பச்சம் 200 கிமி-வாது ட்ராவல் பன்னிருப்போம்..
ஏதோ ரோட்டுல புயல்ல பாதிக்கப்பட்ட ஒருத்தருக்கு பிஸ்கெட் பாக்கெட் கொடுத்து அத போட்டோ புடிச்சி போட்டு நிவாரணம் கொடுத்தோம்னு "பேருக்கு" உதவுனதா இருக்க கூடாதுன்னு நெனச்சோம்..
ஒவ்வொரு குடும்பத்துக்கு மட்டுமே திருப்தியான நிவாரணம் கொடுத்தோம். ஒரு கொசுவலை மட்டுமே 500 ரூ. 5கிலோ அரிசியோட (10 மளிகைப் பொருள்) ஒரு குடும்பத்துக்கு கொடுத்த நிவாரண பொருளோட மதிப்பே 2000.ரூ.
2000 மதிப்பு * 4000 குடும்பம் = 80 லட்சம். இதுக்கே 80 லட்சம்.
புதுக்கோட்டை,வேதாரணியம், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள குட்கிராமங்களில் நிவாரணப் பொருள்கள் வழங்கினோம்..
முடிஞ்சளவு நிவாரணம் எடுத்துட்டு போர வண்டிக்கு செலவ ஒவ்வொரு முறையும் 2 ஆயிரம் செலவ நாங்கதான் ஏத்துக்கிட்டோம்.
கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல நிவாரண பொருள நாங்களே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம ஒவ்வொரு கிராமமா கொண்டு போய் சேத்தோம்..
நிவாரணப் பொருள் கொடுத்தது மட்டுமல்லாமல் நம்மால் முடிந்த களப்பணிகளையும் செய்தோம் வீடு மேல் விழுந்திருந்த மரங்களையும் அகற்றினோம் ...
இவுங்க பணத்துல ஒரு பைசா கூட வேஸ்ட் ஆகால, எல்லாத்தையும் இல்லாதவங்கள்ட்டதான் போய் சேத்தோம்.....
அனைவருக்கும் தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.....