யாருமே செல்ல முடியாத பகுதிக்கு சென்று கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினோம் ....
இடம் ; நல்லத்தன்னி குறுமலை (மூணாறு)
இந்த பகுதியை சுற்றி மலைகள் அதிகம் உள்ளன அதனால் மலைச்சரிவு அதிகம் நடந்துள்ளது அதனால் பலரும் தனது வீடு உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள்... உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்....
இங்கே வசிக்கும் மக்கள் அதிகம் தமிழர்களே இதுவரை பாதை சரியில்லை யென்று நிவாரணப் பொருளை குடோனிலோ, முகாம்களிலோ , கொடுத்து சென்றீர்கள் ., ஆதனால் கொடுத்த மக்களுக்கே கொடுத்து சென்றீர்கள், இன்னும் நிவாரண பொருள்கள் பெறாமலும் , அன்றாட சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வாழ்ந்து வரும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள் அவர்களை கண்டறிந்து நீங்கள் கொண்டு செல்லும் நிவாரணப் பொருள்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்........
இங்கே இருப்பவர்கள் யாருக்கும் வேலை இல்லாத நிலை உள்ளனர் ....
இது போன்ற மக்களை தேடிச் சென்று உதவி செய்வதே எங்களது நோக்கம் .... இன்னும் இதுபோன்ற இடங்களில் உணவுக்கு தேவையான பொருள்கள் அதிகம் தேவைப்படுகிறது.......
உதவிய அனைவருக்கும்
#தீமைக்கும்நன்மைசெய் அறக்கட்டளை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ......
உங்களால் தான் இவ்வளவு பெரிய சேவை சாத்தியமானது .....