Tree Sapling Distribution

02-10-2018 காந்திஜெயந்தி

"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது..
02-10-2018 காந்திஜெயந்தி யை முன்னிட்டு மரம் வளர்க்க வேண்டிய கட்டாய தருணத்தை உணர்ந்து நம் தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பாக துறையூர் பகுதிக்கு உட்ப்பட்ட வீரமச்சான்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 50க்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது... நடப்பட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து வருவதற்கு உறுதிமொழி ஏற்றனர்.....
மரம் வளர்ப்போம், நலம் பெறுவோம் என்பது இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாகும். ஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறது இப்படியே இன்னும் பத்து ஆண்டுகள் போனால் தமிழகமே பாலைவனம் ஆகிவிடுமாம். இதனைத் தடுக்கத் தான் பல அமைப்புகள் ஆங்காங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்கின்றன. இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து மரங்கள் வளர்க்க ஆவன செய்கின்றன.
மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட மாட்டோமா? வேண்டாம், நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.இதனைத்தான் தொலைநோக்குப் பார்வை என்றும் பொது நல சிந்தனை என்றும் கூறுகின்றனர்.
சுயநலத்தின் பிடியில் சிக்கிய மானிட சமுதாயம் இயற்கையை அழித்து, மரங்களை வெட்டி, காடுகளைக் குறைத்து தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறது. இவ்வறிவற்றச் செயலைத் தடுக்க வேண்டும். இத்தருணத்தில் மரங்களின் நலனையும், பயனையும் சிந்திக்கத் தந்தது மிகவும் சரியானதே!
மரம் வளர்ப்போம் !! மழைப் பெறுவோம் !!!
என்றும் மக்கள் நலனில் - தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை
02oct
02oct
02oct
02oct
02oct
02oct
02oct
02oct
02oct
02oct
02oct

Tree Sapling Distribution

04-09-2017 அன்று பரவாய் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் 500 மஞ்சபை வழங்கி சுற்றுசூழல் பாதுகாக்கவும் பிளாஸ்டிக்கை ஒழிக்கவும் தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பாக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது .....
Shiva temple in Paravai village on the great Kumbabhishekam festival on 04-09-2017, Awareness has been made for the 500 saplings for 500 people, Protect the environment and destroy the plastic Theemaikkum Nanmai sei Trust done.
04SEP
04SEP
04SEP
04SEP
04SEP
04SEP
04SEP
04SEP
04SEP
04SEP
04SEP
04SEP
04SEP